பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன்: இவ்வளவு கம்மியா?
என்னதான் பல ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அன்றாடம் வெளியாகி பட்டையை கிளப்பி வந்தாலும், ஆப்பிள் போனுக்கான அந்த மதிப்பு எப்போது குறைவதே இல்லை. ஆப்பிள் நிறுவனமானது ஆண்டு தோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும்.
அந்த வகையில் டெஸ்டிங்கிற்காக இந்தியாவுக்கு மூன்று போன்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது.
தற்போது இந்த போனின் விலையானது லீக் ஆகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மதிப்பில், 22,410 ரூபாயும். ஆனால், இதனுடன் இறக்குமதி வரி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜி.எஸ்.டி. வரி சேரும்போது 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று போன்கள் மட்டுமின்றி இரண்டு புதிய ஐபேடு-களையும் இறக்குமதி செய்துள்ளது. A2588, A2589 ஆகிய இரண்டு ஐபேடுகளும் 500 டாலர் முதல் 700 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே 4.7 இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி சென்சார் கொண்ட SE வடிவமைப்பில் SE 3 வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.