மின்னல் வேகத்தில் எகிறிய ஐபோன் விற்பனை! காரணம் என்ன?
இந்தியாவில் ஐபோனின் விற்பனை மின்னல் வேகத்தில் எகிறியுள்ள நிலையில், இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய சந்தையாக உருவெடுத்து வருகின்றது.
எகிறிய ஐபோன் விற்பனை
இந்தியாவில் ஆப்பிள் ஐ போனின் ஆண்டு விற்பனையானது 6 பில்லியன் டாலராக கடந்த ஆண்டு இருந்த நிலையில், தற்போது 8 பில்லியனாக அதிகரித்துள்ளது.
2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டில் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஐபோன் விற்பனை கூடியதுதான் முக்கியக் காரணம். அதாவது 8 பில்லியன் டொலரில் பாதிக்கு மேல் ஐபோன் விற்பனை மூலம் தான் கிடைத்துள்ளதாம்.
தற்போது ஐபோன் ஏற்றுமதியின் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளதாக கடந்த ஆண்டிற்கான மோர்கன் ஸ்டான்லியின் கணக்கெடுப்பு கூறுகின்றது.
9.2 மில்லியன் ஏற்றுமதிகளுடன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக் கூறுகையில், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாகவிய வருவாயான 883 பில்லியன் டொலரின் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தில் வருவாய் மிகவும் சிறிய பகுதியே. ஆனால் 72.6 பில்லியன் டொலர் வருவாயை சீனா கொண்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் காணப்படும் வளர்ச்சி ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கியமானதாக உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் பல சவால்களை எதிர்கொண்டுவரும் சூழலில் இந்தியா அந்நிறுவனத்துக்குக் கைகொடுக்கிறது.
அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது.
இப்போது சுமார் 14% ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், சமீபத்தில் வெளியான ஐபோன் 15 மாடலும் இதில் அடங்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |