ஃபோனை Airplane Mode-ல் போட்டால் இவ்வளவு நன்மைகளா? சார்ஜ் செய்யும் போது இத மறந்துறாதீங்க
தற்போது இருக்கும் நவீன காலகட்டத்தில் Smart phone-கள் இன்றிமையாத ஒன்றாக உள்ளது.
Smart phone-கள் இல்லாமல் மனிதர்கள் தனியாக இயங்க முடியாத நிலை இருக்கிறது.
இப்படி தனி இடத்தை பிடித்திருக்கும் Smart phone-களில் பயனர்கள் விரும்பக்கூடிய பல ஆப்ஷன்கள் உள்ளன.
அப்படியொரு Option தான் Flight mode.
இந்த Option போனில் இருப்பதால் பல்வேறுப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
அந்த வகையில், Flight mode போனில் இருப்பதால் அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Flight mode
Flight mode என்பது, Off-lineமுறை என்றும் கூறலாம். இந்த Option போனில் ON செய்து வைத்தால் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பு இப்படியான அடிப்படைய விடயம் தடுக்கப்படும்.
Airplane Mode ON செய்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. ஃபோனை Charge செய்யும் போது Airplane Mode ON செய்து விட்டு போட்டால் வேகமாக போனிற்கு Charge ஏறும். இது போனில் இருக்கும் பல Wireless இணைப்புகளை தடுத்து வேகமாக Charge ஏறச் செய்யும்.
2. பொதுவாக பயணம் செய்யும் போனில் Charge அவசியம் இருக்க வேண்டும். இப்படியான நேரங்களில் Charge இறங்காமல் அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் Airplane Mode- ஐ ON செய்து கொள்ளலாம்.
3. வெளியில் செல்லும் போது பல இடங்களில் Wireless இணைப்புகள் இருக்கும். உதாரணமாக மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பேங்க் போன்ற இடங்களை கூறலாம். இது போன்ற இடங்களில் சாதனத்திலிருந்து வரும் தேவையற்ற சிக்னல்கள் சென்சிடிவ் சாதனங்களை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படியான நேரங்களில் நாம் Airplane Mode- ஐ ON செய்து கொண்டால் தேவையற்ற இணைப்புகள் போனை நாடாமல் இருக்கும்.
4. நமது போன் நெட்வொர்க் சரியாக கிடைக்காத நிலையில் நாம் Airplane Mode-ஐ ON செய்து OFF செய்தால் நெட்வொர்க் கிடைக்கும். அத்துடன் Wi-Fi, Bluetooth உள்ளிட்டவைகளுக்கு சரியாக நெட்வொர்க் கிடைக்காவிட்டால் இந்த முறையை முயற்சிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |