அசத்தலான அம்சத்துடன் iPhone 16 Pro: இது கம்யூட்டரா?
ஐபோன் 16 ப்ரோ வெர்ஷனில் ஏஐ அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
iPhone 16 Pro
ஆப்பிள் நிறுவனம் 2024 செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 16 சீரியஸ் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக புதிய ஐபோன் மொடல்களை செப்டம்பர் மாதம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த மொடலையும் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட வாய்ப்பு உள்ளதாம்.
இந்த ஐபோன் 16 சீரியஸில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், முற்றிலும் புதிய அம்சங்கள், டிசைனுடன் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதிலும் இந்த வகை போனில் குறிப்பாக ஏஐ அம்சம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படகுின்றது.
குட்டி கம்யூட்டராக ஐபோன்
சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஐபோன் 16 ப்ரோ மாடல் A18 pro சிப்செட்டில் வரும் என்றும், குறித்த ஐபோன் ஸ்மார்ட் போனை விட சிறப்பான ஒரு சிறிய கம்யூட்டராக செயல்படுமாம்.
இதில் பயன்படுத்தப்படவுள்ள சிப்செட் மிகவும் கடினமான கம்யூட்டிங் பணிகளை சிறப்பாக கையாளும் திறன் கொண்டதால், மற்ற சாதனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.
ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களில் SIRI சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஏஐ அம்சத்தின் மூலமாக மேலும் சிறப்பான விஷயங்களை ஐபோன் 16ல் நாம் செய்ய முடியும்.
மேலும் ஐபோன் 15ல் காணப்பட்ட சில பிரச்சினைகளை நிவர்த்திசெய்யும் விதமாக இந்த ஐபோன் 16 மொடல்களில் குறித்த நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றதாம்.
ஆக மொத்தம் iphone விரும்பிகளுக்கு இந்த சாதனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |