ஆசை ஆசையாய் ஐபோன் 15 வாங்கி ஏமாற்றமடைந்த பயனர்கள்:
இன்றைய காலக்கட்டத்தில் நம்மிடையே அதிக ஆதிக்கம் செலுத்துவது செல்போன்கள் தான். சிறியவர் முதல் பெரியவர் வரை வகை வகையாக செல்போன் பாவனையாளர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பயனர்களை குஷிப்படுத்தும் வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போன் தான் ஐபோன் 15ப்ரோ மற்றும் ஐபோன்15 ப்ரோமெக்ஸ்.
எப்படா இந்த போன் அறிமுகமாகும் விரைவில் வாங்கியே ஆகவேண்டும் என்று காத்திருந்து வாங்கி பலர் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள்.
ஏமாற்றத்தில் பயனர்கள்
புதிதாக போன் வாங்கி அதில் கேம் விளையாடும் போது அல்லது செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது ஐபோனின் பின்புறம் தொடமுடியாத அளவிற்கு சூடாகியுள்ளது. புதிய போனை சார்ஜ் போட்டப்பிறகு ஹீட்டிங் பிரச்சினை ஏற்படுகிறது.
இதனால் புதிய ஐபோன் வாங்கியவர்கள் சமூக வலைத்தளம் மற்றுமன்றி ஆப்பிள் கஸ்டமர் கேயாரில் பல புகார்களை அளித்திருக்கார்கள். நாங்கள் ஆசைஆசையாய் வாங்கிய போனில் இப்படியான பல குளறுபடிகள் இருப்பதால் மாற்றித் தாருங்கள் என கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் இவ்வாறு மொபைல் போன்கள் சூடாகுவது வழக்கம் தான் இது சரியாகி விடும் என்று பதிலளித்திருக்கிறார்கள். பொதுவாகவே புதிய தொலைபேசிகளை வாங்கும் போது நன்கு தெரிந்த ஒருவரை அழைத்து செல்ல வேண்டும் இல்லை என்றால் பல சோதனைகளை செய்து வாங்க வேண்டும். இல்லையெனில் போன்களை வாங்கிய அவை அதிகம் சூடாகி வெடித்து சிதறவும் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |