ஐபோன் 13 இப்படி ஒரு ஆஃபரா? உடனே மிஸ் பண்ணாம வாங்கிடுங்க...!
சுதந்திர தினைத்தை முன்னிட்டி பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐபோன் 13 வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில், ஐபோன் 13 பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 72 ஆயிரத்து 990 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 பேஸ் வேரியண்ட் தற்போது ரூ. 53 ஆயிரத்து 300 விலையிலும், ஐபோன் 11 (128 ஜிபி) ரூ. 47 ஆயிரத்து 990 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஐபோன் 13 சீரிசில் - ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா 2532x1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அடுத்த மாதத்தில், அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் அளவிலும், ஐபோன் 14 மேக்ஸ் மாடல் 6.7 இன்ச், ஐபோன் 14 ப்ரோ 6.1 இன்ச் அளவிலும், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் 13 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் விலையை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.