Foldable Iphone: ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் 2026 இல் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?
பிராண்ட் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் அப்பிள் நிறுவனமானத்தின் ஐபோன், சர்வதேச அளவில் மொபைல் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

sedentary lifestyle: நீங்க ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா? அப்போ இந்த உடல்நல அபாயங்கள் உறுதி!
அதுமட்டுமன்றி கால மாற்றத்துக்கு இணைந்து, பயனாளர்களை கவரும் விதமாக, பல்வேறு மேம்படுத்தல்களையும் ஐபோன்கள் அறிமுகப்படுத்தி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மைக்காலமாகவே தகவல்கள் பரவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது அதன் வடிவமைப்பு மற்றும் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சாம்சங் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளைஅறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான எதிர்பார்ப்பு சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐபோன் வடிவமைப்பு, கேமரா விவரங்கள்
அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும்,மடிக்கக்கூடிய ஐபோன் ஒரு புத்தக பாணியில் அதன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
தோராயமாக 7.8 இன்ச் மடிப்பு இல்லாத இன்னர் டிஸ்பிளே மற்றும் தோராயமாக 5.5 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே காட்சியைக் கொண்டிருக்கும்.
இது மடிக்கும்போது 9–9.5 மிமீ தடிமனையும் விரிக்கும்போது 4.5–4.8 மிமீ தடிமனையும் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தடிமன், சந்தையில் தற்போதைய மிக மெல்லிய போனான 4.2மிமீ தடிமன் கொண்ட ஒப்போ ஃபைண்ட் N5-க்கு அருகில் வருவதை காண முடிகிறது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் மடிக்கக்கூடிய ஐபோன் தயாரிக்கப்படும். இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும்.
இதன் முன்பக்க கேமரா மடிந்த மற்றும் விரிக்கப்பட்ட நிலைகளில் வேலை செய்யும். உள் இடத்தை சேமிக்க, ஃபேஸ் ஐடிக்கு பதிலாக டச் ஐடியுடன் கூடிய பக்கவாட்டு பட்டன் வழங்கப்படலாம். நிறுவனம் அதை AI அம்சங்களுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
உற்பத்தி பணிகள்: நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மடிக்கக் கூடிய ஐபோன் மாடலுக்கான விவரக்குறிப்புகளை இறுதி செய்யும் என்றும்,இந்த திட்டத்தின் உற்பத்தி பணிகள் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பெருமளவிலான உற்பத்தி 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய வடிவிலான ஐபோனை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தக் கூடும்.
ஐபோன் 18 சாதனங்களுக்குப் பிறகு கூட இது அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஒரு வருடம் கழித்து, நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை மாடலையும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
விலை என்ன?
வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் $2,000 முதல் $2,500 க்கு மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுவதன் மூலம், ஆப்பிளின் மிகவும் விலையுயர்ந்த ஐபோனாக இது இருக்கலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.
ஐபோன் பயன்படுத்துபவர் என்ற அந்தஸ்தை பெற விரும்புவோர் மற்றும் ஆப்பிளின் விசுவாசமான ரசிகர் பட்டாளம் காரணமாக, பிரீமியம் விலை இருந்தபோதிலும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து சந்தையில் வலுவான மாற்றாக ஆப்பிளின் மடிக்கக் கூடிய ஐபோன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |