அதிக தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்பிள் ஷூ: எவ்வளவுன்னு தெரியுமா?
தற்போது எல்லாம் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என எல்லாம் ஸ்மார்டாக மாறியிருக்கிறது.
அப்படி பல்வேறு தொழிநுட்ப கருவிகளை தயாரித்து வழங்கும் இந்தக் கருவிகள் அதிக விலைக் கொண்டதாகவும் இருந்து வருகிறது. அதிக விலையாக இருந்தாலும் கூட அதனை மக்கள் அதிகம் விரும்புகின்றார்கள்.
அதிக விலைக்கு சென்ற ஆப்பிள் ஷூ
அப்படி 1990ஆம் ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக அப்போதே டி. ஷர்ட், ஷூக்கள் என்பன ஆயிரக்கணக்கான பயன்பாட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது தயாரிக்கப்பட்ட இந்தப் பொருட்கள் எல்லாம் தற்போது சவுத் பை (southby) என்ற நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.
இந்தப் பொருட்களை எல்லாம் அதிகமானோர் ஏலத்தில் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஏலத்தில் விடப்பட்ட பொருட்களில் ஒரு ஜோடி ஷூ அதிக விலைக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் ஜோடி ஷூ ஒன்றை 40 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். மேலும், ஆப்பிள் நிறுவன பொருட்களில் இந்த ஆப்பிள் ஜோடி ஷூ தான் அதிக விலைக்கு சென்றுள்ளதாக சவுத் பை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |