தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்.
ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய பலராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் -
உடல் எடை குறைக்க
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
கண் ஆரோக்கியத்திற்கு
கேரட்டில் இருப்பது போலவே, ஆப்பிளிலும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், கண் பார்வையை பலப்படுத்துவதோடு, கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக, கண்கள் வறண்டு போவதைத் தடுக்க உதவி செய்யும்.
குடற்புண் சரியாக
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடற்புண் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தாக்கம் உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஆப்பிள் உதவி செய்யும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
முகம் பிரகாசிக்க
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் போலிவு பெரும்.
நரம்பு தளர்ச்சிக்கு
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.