பச்சை நிறத்தில் சூப்பரான அம்சங்களுடன் வெளிவரப்போகும் ஐபோன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் எப்பொழுதுமே தனி ஸ்பெஷல் தான்.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் புதிதாக iPhone SE 5G, மேக் ஸ்டுடியோ மற்றும் M1 சிப் உடன் ஐபாட் ஏர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் SE
ஐபோன் SE 3வது ஜெனரேஷன் ஐபோன் 8 சேஸ்ஸைக் கொண்டுள்ளன. இருப்பினும், இது ஐபோன் 13 தொடரை இயக்கும் A15 பயோனிக் சிப்புடன் வருகிறது.
மேலும் அதன் ஒற்றை, 12-மெகாபிக்சல் லென்ஸ் புகைப்பட மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது.

விலை விபரம்
ஐபோன் SE 3வது ஜெனரேஷன் 64 ஜிபி போன் ரூ.43,900, 128ஜிபி போன் ரூ.48,900 மற்றும் 256 ஜிபி போன் ரூ.58,900.
இந்த ஐபோன் சிவப்பு, மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் ஆகிய மாடல்களில் வரவுள்ளது. இந்தியாவில், ஐபோன் SE 3 மார்ச் 11 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம்.
இதனைத்தொடர்ந்து, ஐபோன் 13 மாடலானது புதிய கலரில் வர உள்ளது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் இப்போது 'ஆல்பைன் கிரீன்' நிறத்தில் வரும்.
ஐபோன் 13 மற்றும் 13 மினி ஆகியவை 'போல்ட் கிரீன்' நிறத்தில் வர இருக்கிறதாம். இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் முதல் அறிவிப்பு