வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க

Healthy Food Recipes
By Pavi Feb 19, 2025 10:20 PM GMT
Report

மாத இறுதியில் வீட்டில் காய்கறி மற்றும் சமைக்கும் பொருட்கள் எல்லாம் முடிந்திருக்கும். இந்த சமயத்தில் ஏதாவது ஒரு குழம்பு அவசரமாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு அப்பளம் இருந்தால் போதும்.

சுவையான கத்தரிக்காய் பிரியாணி... சில நிமிடங்களில் செய்வது எப்படி?

சுவையான கத்தரிக்காய் பிரியாணி... சில நிமிடங்களில் செய்வது எப்படி?

இந்த அப்பளத்தை வைத்து சுவையான குழம்பு செய்து எடுத்துவிடலாம். இதை செய்வதற்கு காய்கறி எதுவும் தேவை இல்லை. தேவைப்பட்டால் நீங்கள் பயன்படுத்தலாம்.

இதை சூடான சாதத்தில் நேரடியாக ஊற்றி வேறெதுவும் வைத்துக்கொள்ளாமல் சாப்பிடலாம். அரைமணி நேரத்தில் சுவையான அப்பள குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க | Appalam Kulambu Recipe Healthy Food Easy Home

 அப்பள குழம்பு செய்ய தேவையானவை

  • அப்பளம்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • பெருங்காய தூள்
  • சாம்பார் தூள்
  • தண்ணீர்
  • புளி தண்ணீர்
  • வெல்லம்
  • வெந்தயம்  

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில்  25 மில்லி நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இது சூடானதும் 5 காய்ந்த மிளகாய் போட வேண்டும். இதன் பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க | Appalam Kulambu Recipe Healthy Food Easy Home

சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின்  இரண்டு  தக்காளியை நறுக்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

அடுத்து கால் ஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் சாம்பார் தூள், அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க | Appalam Kulambu Recipe Healthy Food Easy Home

இது இரண்டு கொதி வந்த பின்னர் எலுமிச்சை அளவு புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்து கடாயில் ஊற்றி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். சுவையை சற்று அதிகரிக்க ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

மீண்டும் 250 மில்லி தண்ணீர் ஊற்றுங்கள். 8 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். அடுத்ததாக 5-6 அப்பளங்களை இரண்டாக உடைத்து குழம்பில் போட்டு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.

வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க | Appalam Kulambu Recipe Healthy Food Easy Home

இறுதியாக ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தனியாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அதில் பாதி ஸ்பூனை இந்த குழம்பில் போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான அப்பள குழம்பு தயார்.   

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க...

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US