பொது மேடையில் அனைவர் முன் அத்துமீறிய மாணவன்! நடிகை என்ன செய்தார் தெரியுமா?
கல்லூரி நிகழ்வில் கலந்துக் கொண்டு, மாணவர் ஒருவர் அத்துமீறிய நிலையில் நடிகை கொடுத்த தரமான பதிலடி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சினிமாவிற்கு அறிமுகம்
நடிகை அபர்ணா பாலமுரளி “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா” என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2015ல் மலையாளத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் “பொம்மியாக ” ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கான ரசிகர்கள் குழாம் உருவாகியது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆர் ஜே பாலாஜியுடன் “வீட்ல விசேஷம்” மற்றும் “அசோக் செல்வன் உடன் நித்தம் ஒரு வானம் ”ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரசிகர்கள் கண்டனம்
“தங்கம்” என்ற மலையாள திரைப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன் ஆகிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
குறித்த திரைப்படத்தை ப்ரோமோட் செய்வதற்கு, கல்லூரி ஒன்றுக்கு அனைவரும் சென்றுள்ளனர்.
அப்போது அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், நடிகை அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.
இதன்போது அபர்ணா குறித்த மாணவருடன் கைகுலுக்கியப்படி பூங்கொத்தை வாங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபர்ணாவின் தோலில் கையை போட முயற்சித்துள்ளார்.
இதனை தெரிந்துக் கொண்ட அபர்ணா மெதுவாக நழுவியுள்ளார். மீண்டும் அத்துமீற மாணவன் முயற்சித்த போது, படக்குழுவினர் சத்தம் போட்டு குறித்த மாணவனை விரட்டியுள்ளார்கள்.
Unbelievable and disgusting! https://t.co/Ls4y06QrVx
— Manjima Mohan (@mohan_manjima) January 19, 2023
இந்த விடயம் கல்லூரியில் அதிகம் பேசப்பட்டதால், மீண்டும் மைக்கை வாங்கி “ நான் தப்பாக நடந்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. நான் அபர்ணாவின் தீவிர ரசிகர்” என கூறி அபர்ணாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பேசிவிட்டு மீண்டும் கைக் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அபர்ணாவும் கைக் கொடுக்காமல் சிரித்து சமாளித்துள்ளார்.
இதனால் அந்த கல்லுாரியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.