anxiety symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மனநல பிரச்சினை இருக்குதுன்னு அர்த்தம்
பொதுவாக ஆன்சைட்டி என்பதற்கு தமிழில் குறிப்பிட்டு தனித்துவமாக விளக்கம் கொடுப்பது சற்று கடினம் தான். அதை ஒருவித பதட்டம், பயம், மனக்கவலை என்று குறிப்பிடலாம்.
மனநல பிரச்சினைகள் தற்காலத்தை பொருத்தவரையில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரையில் அனைவருமே பாதிக்கப்படுகின்ற ஒரு அவல நிலையே காணப்படுகின்றது.
தற்காலத்தில் அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை, அதிகரித்த வேலைபளு , அதிகரித்த கல்வி சுமை மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனநல பிரச்சினைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது.
மன அழுத்தம், மனநல நிலைமைகள் இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெற்றாலும் கூட இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான நிலைகள் ஆகும். ஆனால் இரண்டும் மன நலத்துடன் தொடர்புடைய நோய் அறிகளே ஆகும்.
குறிப்பாக மன அழுத்தத்தின் விளைவாக உடலி்ல் விரைவாக ஏற்படும் குறிப்பிட்ட சில மாற்றங்களை உதாரணமாக குறிப்பிட முடியும். உதாரணத்துக்கு ஒரு நேர்காணலுக்கு செல்லும்முன்போ அல்லது பெரிய மேடைகளில் புதிதாக பேச முற்படும் சமயங்களில் திடீரென உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களே ஆன்சைட்டி எனப்படுகின்றது.
சின்ன சின்ன விடயங்களால் மனதுக்குள் ஏற்படும் மனக்கவலை சில நாட்களிலேயே சாதாரண நிலைக்கு மாறிவிடும். ஆனால் நீண்ட காலமாக தொடர்கின்ற பிரச்சினைககளால் ஏற்படும் பதட்டமும் மனக்கவலையும் ஒரு நோய்நிலையாக மாற்றம் பெருகின்றது. இது உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஆன்சைட்டி வகைகள்
சாதாரண ஆன்சைட்டி (general anxiety)
சோசியல் ஆன்சைட்டி (Social anxiety)
சாலோவிங் ஆன்சைட்டி (Swallowing anxiety)
பர்ஃபாமன்ஸ் ஆன்சைட்டி (Performance anxiety)
ஹெல்த் ஆன்சைட்டி (Health anxiety)
செக்சுவல் ஆன்சைட்டி, (Sexual anxiety)
ரிலேஷன்ஷிப் ஆன்சைட்டி (Relationship anxiety)
டிரைவிங் ஆன்சைட்டி (Driving anxiety)
போபியாக்கள் (Phobias) என பல வகையான ஆன்சைட்டிகள் காணப்படுகின்றது.
ஆன்சைட்டி முக்கிய அறிகுறிகள்
ஆன்சைட்டியால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் குறிப்பாக ஏதேனும் நோயைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதும் அல்லது கேள்விப்படும் போது அந்த நோய் தனக்கு இருப்பதாக உடனடியாக நினைத்து கொள்வார்கள். இந்த பயமானது அவரை உளவியல் ரீதியில் பாதிப்படைய செய்கின்றது.
அடிக்கடி நோய்கள் மற்றும் அதற்கான அறிகுறிகளை இணையத்தில தேடி பார்த்து, அந்த அறிகுறிகள் தங்களுக்கு இருக்கின்றதா என பரிசோதிக்கும் மனநிலையில் இருப்பார்கள்.
ஒரு நோய் தனக்கு இருப்பதாக நினைத்து கற்பனை செய்துக்கொண்டு அதற்கான மருத்துவ பரிசோதனைகளையும் கூட செய்வார்கள்.
அவ்வாறு எடுத்து கிடைக்கக்கூடிய பரிசோதனைகளை நம்பாமல் அது பொய்யாக இருக்குமோ என்ற சிந்தனையும் இவர்களுக்கு தோன்றும்.
ஆன்சைட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் எதிர்காலத்தில் என்னென்ன ஆகும் என்பதை நினைத்து நினைத்து நிகழ்காலத்தில் கவலையிலேயே இருப்பார்கள்.
ஆன்சைட்டி ஏற்பட காரணம்
இவர்களுக்கு திடீரென ஏதேனும் அபாயகரமான நோய் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது அவசரமான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இவர்கள் அதன் பின்னர் ஒருவர் ஆன்சைட்டியால் பாதிக்கப்படலாம்.
தங்களது ஆனுமையை மனதில் கொண்டு, தங்கள் ஆரோக்கியம் குறித்தும், ஏதேனும் நோய்கள் குறித்தும், அடிக்கடி அதிகப்படியாக யோசித்து அல்லது கண்ணால் பார்ப்பது போன்ற நேரங்களில் ஆன்சைட்டியால் பாதிக்கப்படலாம்.
அதிகளவில் சமூக வளைத்தளங்களை பாவிப்பதன் காரணமாகவும் அதிகளவாக விசித்திரமான விடயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்வமதாலும் ஆன்சைட்டி ஏற்படலாம்.
அல்லது சில விடயங்கள் குறித்து அதிகப்படியாக சிந்திக்கும் தன்மை கொண்டவர்களுக்கு அதாவது over thinker களுக்கு ஆன்சைட்டி பிரச்சினை ஏற்படக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |