44 வயசானா என்ன? அனுஷ்காவின் திருமணம் குறித்து அவரது டீம் கொடுத்த விளக்கம்!
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு விரைவில் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இணைளத்தில் வைரலாகிய நிலையில், அது பற்றி அவரது டீம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளதுடன் ஒரு விளக்கமும் கொடுத்துள்ளது.
அனுஷ்கா ஷெட்டி
அருந்ததி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

இப்படத்திற்கு முன் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அருந்ததி தான் நல்ல அடையாளத்தை இவருக்கு உருவாக்கியது. அதன் பின்னர் அருந்ததி புகழ் அனுஷ்கா என்று குறிப்பிடும் அளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார் .
இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த அனுஷ்காவிற்கு சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது.

இதை தொடர்ந்து சிங்கம் 2, வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், வானம், லிங்கா, என்னை அறிந்தால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததுடன் வசூலிலும் வெறியாட்டம் போட்டது.

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
அதனை தொடர்ந்து எடல் எடையை குறைக்க சில வருடங்களாகவே போராடி வருவதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. தற்போது 44 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்தே இருந்து வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அனுஷ்கா ஷெட்டி டீம் மறுப்பு
இந்நிலையில், அது பற்றி அவரது டீம் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஒருவரது வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன் அவரிடம் அந்த செய்தியை பற்றி கேட்டு உறுதி செய்து கொள்ளவாவது வேண்டியது அவசியம்.

எல்லா செய்திகளிலும் 44 வயது என்பதை தான் பெரிய விடயமாக பேசுகிறார்கள். அது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா.? வயதை சொல்லி age shaming செய்கிறீர்கள்.
வயது தான் அவ்வளவு முக்கியம் என்றால் ஹீரோக்களின் வயது பற்றி அதே எனர்ஜி உடன் எழுதுங்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி செய்தி வருவது ஏன் என காட்டமாக அனுஷ்கா டீம் கேட்டிருக்கிறது. குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |