இணையத்தில் லீக்கான விராட் கோலி மகளின் புகைப்படம் - வாயடைத்துபோய் அனுஷ்கா சர்மா செய்த செயல்!
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த ஜனவரி மாதம் தான் பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு வாமிகா என பெயர் சூட்டியிருந்தனர்.
இவர்களின் குழந்தையின் முகத்தை பொது உலகில் அறிமுகப்படுத்தவேண்டாம் என உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்து சென்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், விராட் கோலியின் மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துள்ளார். ஆனால், எந்த பத்திரிக்கையாளரும் குழந்தையின் புகைப்படத்தை காட்டவில்லை.
இதனால் அனுஷ்கா சர்மா புகைப்படத்தை வெளியிடாத ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். மேலும், எங்கள் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைக்கிறோம்.
அவர் வளர்ந்த பிறகு தன் விருப்பத்தை அவரே தேர்ந்தெடுக்கட்டும். அதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என தெரிவித்து இருக்கிறார்.
"?" is definitely a family favourite pose
— S? (@veenushkie) December 19, 2021
Vamika picking up everything fast from her mumma and Dadda?❤️#ViratKohli #AnushkaSharma #vamika pic.twitter.com/FwLjLd08ti
