அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நோயா? அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்
தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி தன்னிடம் இருக்கும் நோய் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி.
இவர் தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து “பாகுபலி” என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபல்யமடைந்தவராக திகழ்ந்து வந்தார். இவரின் கம்பீர தோற்றத்திற்கும், மெழுகு சிலைப்போல் இருக்கும் அழகிற்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பெரியதளவு படவாய்ப்பு இல்லாத காரணத்தால் சினிமாவிலிருந்து சற்று விலகி இருக்கிறார்.
மேலும் இவர் தொடர்பில் பல சர்ச்சையான வதந்திகள் வந்தாலும் அதற்கு எல்லாம் அடுத்தடுத்து முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்.
அனுஷ்காவிற்கு இருக்கும் நோய்
இந்நிலையில் நடிகைகளுக்கு இருக்கும் நோய்கள் குறித்து பல இரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் அனுஷ்கா ஷெட்டிக்கும் ஒரு நோய் இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அனுஷ்கா ஒரு பேட்டியில் கூறுகையில்,“ நான் சிரிக்க ஆரம்பித்து விட்டேன் என்றால், என்னால் அதனை சுமார் 10 -15 நிமிடங்கள் கட்டுபடுத்த முடியாது. இதனால் சிரமத்தை சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “அனுஷ்காவுக்கு இப்படி ஒரு நோயா? என ஆச்சரியப்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.