அனுஷ்காவின் வாய்ப்பை பறித்த நயன்தாரா: உண்மையை உடைத்த ஆ.ஜே.பாலாஜி!
மூக்குத்தி அம்மன் திரைப்பட்டத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாராவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
மூக்குத்தி அம்மன்
ஆர். ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் ஆகியோர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”.
இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி நயன்தாராவுக்கு இன்னும் ஒரு மாஸானா திரைப்படமாக மாறியது. மேலும், ஆர்.ஜே.பாலாஜியின் கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஊர்வசி ஆகியோரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இதில் நயன்தாரா இதுநாள் வரையில் யாரும் பார்த்திராத புது நயன்தாராவாக மாறி அம்மன் வேடத்தில் அவ்வளவு அழகாக நடித்திருந்தார்.
நயனுக்கு பதில் அனுஷ்கா
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தியிருந்தாலும் அந்த வேடம் அனுஷ்காவுக்கு உரியது என பேட்டிய ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது,
அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க எந்த ஐடியாவும் கிடையாது. அதற்காக முதலில் அனுஷ்காவை தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவரிடம் பேசி சம்மதம் வாங்கினாலும் அவர் 8 மாதங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என தெரிவித்ததால் அது சரிப்படாது என்ற காரணத்தால் நயன்தாராவை அணுகியுள்ளார்.
அவர் உடனே சம்மதம் சொல்லவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்தார். நயன்தாராவின் திரை வாழ்க்கையில் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது.
மேலும், இந்த திரைப்படத்திற்காக நயன்தாரா அசைவ உணவை உண்ணாமல் தன்னை வருத்தி இந்த காலத்து அம்மனாக நடித்து கொடுத்திருக்கிறார்.