உண்மையா காதலிச்சேன்... ரசிகரின் கேள்விக்கு ஓபனாக காதலை பற்றி சொன்ன அனுபமா!
தமிழ் சினிமாவில், கொடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இவர், மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அனுபமாவோ, ஆமாம். அது உண்மையான காதல் ஆனால் முறிந்துவிட்டது என்றார். அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை, காதலரை பிரிய வேண்டியதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.