ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!

Tamil Cinema Anupama Parameswaran Relationship Tamil Actress
By Vinoja Aug 13, 2026 12:54 PM GMT
Report

actress anupama open talk :  காதல் என்பது மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த உறவாக இருக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் அதே காதல் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய வலியை ஏற்படுத்திவிடுகின்றது என உருக்கமான தொனியில் தனது கடந்தகால காதல் அனுபவத்தை நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்துள்ளார். 

சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த காதல் உறவில் தான் சந்தித்த பல்வேறு இன்னல்களையும், அதிலிருந்து இறுதியில் எப்படி வெளியேறினார் என்பதையும் சமீபத்திய பேட்டியொன்றில் அவர் மனம் திறந்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்! | Anupama Opens Up About Her Toxic Relationship

நடிகை அனுபமா பரமேஸ்வரன்

மலையாள திரையுலகில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

தமிழில் ‘கொடி’, ‘டிராகன்’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்! | Anupama Opens Up About Her Toxic Relationship

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசிய அனுபமா, அந்த உறவில் தான் அனுபவித்த மனவேதனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

காதல் வாழ்க்கை குறித்து ஓபன் டாக்

குறிப்பாக, தனது காதலர் தன்னை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, காதலனின் குடும்பத்தினர் தன்னுடன் பழகத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் செய்யுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் அனுபமா கூறியுள்ளார்.

ஆனால், தனது காதலர் தன்னைவிட வயதில் குறைந்தவர் என்பதால் அந்த நிச்சயதார்த்தத்தை தவிர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்! | Anupama Opens Up About Her Toxic Relationship

தொடக்கத்தில் காதல் உறவு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் தனது காதலரின் குணாதிசயங்களைப் பற்றி தனக்கு பல விஷயங்கள் தெரியவந்ததாக அனுபமா தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிறரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை அவரிடம் இருந்ததை உணர்ந்ததாகவும், அதன் பின்னரே அவரிடம் இருந்து விலக முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

தனது இரண்டு ஆண்டு காதல் வாழ்க்கையை விவரித்த அனுபமா, காதலரின் குணம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார். ஒரு நாள் அவர் அந்நியன் திரைப்படத்தில் வரும் ரெமோ கதாபாத்திரத்தைப் போல மிகவும் அன்பானவராக இருப்பார். அப்போது, இப்படியொரு காதலர் நமக்கு கிடைத்திருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால், மறுநாளே அதற்கு நேர்மாறாக, தன்னுடன் எந்தத் தொடர்பும் இல்லாத அந்நியன் போல நடந்துகொள்வார் என்றும், அதற்கு அடுத்த நாள் குழந்தையைப் போல தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு காதலரின் அணுகுமுறை தொடர்ந்து மாறி மாறி வந்ததாகவும், இந்தச் சூழ்நிலையைத் தான் சுமார் இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்! | Anupama Opens Up About Her Toxic Relationship

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

சில நாட்களுக்கு முன்பு, தனது காதல் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதன் மூலம் தனக்கு ஒரு விதமான விடுதலை கிடைத்திருப்பதாகவும் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், தற்போது தனது காதல் அனுபவம் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனினும்,  குறித்த பேட்டியில் தனது முன்னாள் காதலர் யார் என்பதை அனுபமா வெளிப்படுத்தவில்லை. காதல் உறவில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை மட்டுமே அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்த்கது.

திரையுலகில் எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றும் அனுபமா பரமேஸ்வரன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு மன உளைச்சலை சந்தித்ததாக வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US