ஆண்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ மறக்காம இதை செய்யுங்க
சத்தான உணவு முறையை சரியாக கையாண்டாலே ஆண்கள் 10 வயது குறைந்தது போல தோற்றம் அளிக்கலாம். நாம் சாப்பிடும் உணவு தான் நமது ஆரோக்கியம், தோற்றம் போன்றவையே தீர்மானிக்கிறது.
இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆனால் நாம் அந்த உணவுகளை தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். பழமையான உணவுகளாக கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்ற உணவுகளில் நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஈஸியாக கிடைக்கின்றது.
வழி முறைகள்
அதிக காலம் உறங்குவதும் தவறு அதே போன்று மிக குறைந்த காலம் உறங்குவதும் தவறே. உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமென்றால் கட்டாயம் நீங்கள் இரவில் விரைவாகவே தூங்க செல்ல வேண்டும். ஆண்கள் தினமும் வெந்நீரில் குளித்தால் சீக்கிரமே முதுமை அடைந்துவிடுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
இவை உடலின் தட்ப வெப்பத்தை அதிகமாக்கி சருமத்தை வறட்சி ஆக்குகிறது. அத்துடன் தோலின் ஈரப்பதமும் குறைந்து முதுமையை தந்துவிடுகிறது. அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் முதுமையை விரைவிலே அடைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
இளம்வயதினர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது. பசலைக் கீரை, பீன்ஸ் போன்ற பச்சை நிற காய்கறிகளை சாப்பிடும் பொழுது பொழுது முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கின்றது.
சூரியனில் இருந்து வருகின்ற UV கதிர்கள் இளம் வயதிலே வயதான தோற்றத்தை தர கூடியது. பொதுவாக காலை வெயில் உடலுக்கு நன்மையே தரும். இருப்பினும் மற்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.