கெட்ட கொழுப்பை கரைக்கும் புளிச்ச கீரை தொக்கு... ஆந்திரா பாணியில் எப்படி செய்வது?
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தவித்துவிட்டு துரித உணவுகளை அதிகமாக சாப்பிட்டு ஆரோக்கிய பிரச்சினைகளை தாங்களாகவே விலை கொடுத்து வாங்கிக்கொள்கின்றார்கள்.
ஆனால் நமது முன்னோர்கள் உணவே மருந்து என ஆரோக்கியம் நிறைந்த உணவு முறையை பின்பற்றினார்கள்.
அப்படி பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் புளிச்சக்கீரை இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. புளிச்சக்கீரை உடலில் உள்ள மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் (LDL) கொழுப்பைக் குறைப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த புளிச்ச கீரையில் ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் அசத்தல் தொக்கு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை – 1 கட்டு
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு – 15 பல்
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
தனியா (விதை) – 1 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் புளிச்ச கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி காயவிட வேண்டும். பின்னர் புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்து, அவை ஆறிய பின் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர் புளி தண்ணீர் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கீரையை போட்டு கீரையில் உள்ள நீர் வற்றும்வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர், மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து முன்னர் வதக்கியுள்ள கீரையோடு சேர்க்கவும்.
எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையை சேர்த்து அந்த கலவையை நன்றாக கிளறினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் புளிச்ச கீரை தொக்கு தயார்.

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |