இதுதான் எறும்பின் முகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? திகில் கிளப்பும் புகைப்படம்
நிக்கான் பரிசை வென்ற எறும்பின் க்ளோஸ் அப் புகைப்படம் பலருக்கும் திகிலை கிளப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல.
ஆம், மிக கொடூரமாக ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற முகம் போல் இருக்கிறது.
எறும்பின் முகம்
நம் வீடுகளில் சர்வசாதாரணமாக வலம்வரும் எறும்பை பார்த்திருப்போம், ஒரே அடியில் அதை நசுக்கி தூக்கி கூட எறிந்திருப்போம்.
அதன் உடலை நாம் பார்த்தாலும், முகத்தை நாம் பார்த்ததில்லை, இந்நிலையில் லிதுவேனியாவை சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்ற புகைப்பட கலைஞர் எறும்பிக் முகத்தை படம்பிடித்துள்ளார்.
மிக கொடூரமாக இருக்கும் அந்த படத்தை பலரும் பார்த்து பீதியில் உறைந்துவிட்டார்கள்.
புகைப்பட விருது
Nikon Small World Photomicrographyக்காக எடுக்கப்பட்ட இந்த படம் விருதையும் வென்றுள்ளது.
இந்த விருதானது சாதாரண மனிதர்களின் கண்களினால் பார்க்க முடியாத புகைப்படங்களை எடுப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக பலரும் புகைப்படங்களை அனுப்ப, யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்பவர் மைக்ரோஸ்கோப்பின் மூலம் 5 மடங்கு பெரிதாகி எடுக்கப்பட்ட எறும்பின் முகத்தை அனுப்பியிருந்தார்.
சிவப்பு நிற கண்களுடன், தங்கம் போன்று கொடுக்குகள் மின்ன கொடூரமாக இருக்கும் எறும்பின் முகத்தை பலரும் திகிலுடன் பார்த்து வருகின்றனர்.
இந்த நிறுவனம் சுமார் 48 ஆண்டுகளாக புகைப்பட போட்டியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.