பிக் பாஸில் அன்ஷிதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறிய அன்ஷிதா வாங்கிய சம்பளம் குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி 24 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியது.
தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்றைய தினத்தில் அன்ஷிதா வெளியேற்றப்பட்டார். அன்ஷிதா பயங்கரமாக சண்டையும், சச்சரவையும் பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தி வந்தார்.
அன்ஷிதா வெளியேறுவதற்கு முன்பு விஷாலை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அன்ஷிதாவிற்கும், அர்னவ்விற்கும் ஏற்கனவே காதல் உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் இவர்களின் காதல் விடயம் என்ன ஆகப்போகின்றது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அன்ஷிதா 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில் மொத்தம் 21 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |