Bigg Boss 10: பிக்பாஸிடம் கோபப்பட்ட அன்சரின் மகள்! மைக்கை கழற்றி செய்த அலப்பறை
Bigg Boss Ansar Daughter: பிக்பாஸ் வீட்டிற்குள் ப்ரித்வி மற்றும் அன்சரின் குடும்பத்தினர்கள் வந்துள்ள நிலையில், அன்சரின் மகள் கொடுக்கும் அலப்பறை அதிகமாக இருக்கின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தந்து வருகின்றனர். தற்போது வீடடில் எட்டு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
கடந்த வார எவிக்ஷனின் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் டாஸ்க், நாமினேஷன் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் திங்கள் அன்று குடும்பத்தினரிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் நான்கு பேர் கடிதத்தினை வாசிக்கமுடியாமல் தீயில் கொளுத்தப்பட்டது.
தற்போது நேற்றிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். அதாவது நேற்றைய தினம் வினோத் மற்றும் லக்ஷ்மி ப்ரியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இதில் லக்ஷ்மி பிரியா 8 ஆண்டுகளாக குடும்பத்தினை பிரிந்திருந்த நிலையில், நேற்று அதற்கு மன்னிப்பு கேட்டு சேர்ந்துள்ளார்.
கோபத்தில் அன்சரின் மகள்
இன்றைய தினத்தில் ப்ரித்வின் பெற்றோர் வந்துள்ளனர். மேலும் ப்ரித்வியின் உடன்பிறந்தவர் வெளிநாட்டிலிருந்து ப்ரித்வியிடம் காணொளி மூலமாக பேசியுள்ளார்.
அடுத்ததாக அன்சரின் குடும்பம் வீட்டிற்குள் வந்துள்ளது. அன்சரைப் போன்று இரண்டு குழந்தைகளும் பயங்கர வாயடித்து வருகின்றனர்.
அன்சரின் மகன் பிக்பாஸ் உங்களது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் என்று கூறியதற்கு, பிக்பாஸ் நன்றி கூறினார். பின்பு பிக்பாஸ் மகளிடம் பேச ஆரம்பித்தார்.
பிக்பாஸ் என்று மகள் கூப்பிட என்ன ஆல்யா எப்படி இருக்கீங்க என்று கேட்டார். இதற்கு குட்டி நல்லா இருக்கேன் என்று பதில் கொடுத்துள்ளார். மேலும் ரைம்ஸ் தெரியுமா என்று கேட்டதற்கு, தெரியாது என்று பதிலளித்தார்.
பிக்பாஸ் நீங்க எங்க இருக்கீங்க என்று பிக்பாஸிடம் குட்டீஸ் கேட்டுள்ளார். அதற்கு உங்க அப்பாவின் இதயத்திற்குள் என்று பதிலளித்தார்..
அதற்கு ஆல்யா அப்பாவின் இதயத்துல நான் தான் இருப்பேன் என்று தக்க பதிலடி கொடுத்தார். மேலும் பிக்பாஸிடம் பேசும் போது கோபமாக மைக்கையும் கழற்றியுள்ளார். இன்றைய தினத்தில் அன்சரின் குழந்தை பெண்த அட்ராசிட்டி தான் ஹைலைட் என்று கூற வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |