சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்! அரிய வழிபாட்டின் பலன்கள்
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு அன்னாபிஷேகம், ஐப்பசி மாதத்தின் முழு நிலவு நாளில் சிவாலயங்களில் நடைபெறுகின்ற பூஜையே இதுவாகும்.
இப்பூஜையின் போது வடித்த சாதத்தினை சிவலிங்கத்தின் மீது இட்டு முழுமையாக காப்பு போல செய்கின்றனர், இவ்வடிவிற்கு தீபாரதனைகள் காட்டப்படுகின்றன.
சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம், இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.
பலன்கள் என்னென்ன?
லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம், அன்றைய தினம் மனதார சிவலிங்கத்தை வணங்கினால் பஞ்சபூத தளங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கப்பெறும்.
நோய் நொடிகள் அண்டாது ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை, இன்றைய தினம் சிவனை தரிசித்தால் பல ஜென்ம பாவங்களை போக்கும்.
நிறைவான வாழ்வும், செல்வங்கள் வந்து சேரும் எனவும் நம்பப்படுகிறது.