வெறும் 1 ரூபாய்க்கு சுவையான மொறு மொறு அண்ணாத்த தோசை! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அண்ணாத்த திரைப் படம் தீபாவளியன்று ரிலீசாகியது.
இப்படிப்பட்ட தருணத்தில் ரஜினி ரசிகர் ஒருவரின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
திருச்சியை சேர்ந்த கர்ணன் என்பவர் தீவிர ரஜினி ரசிகர். திருச்சி ராம்ஜி நகரில் உணவகம் நடத்தி வருகிறார்.
அண்ணாத்த படத்தை வரவேற்கும் பொருட்டு 30 ரூபாய் மதிப்புள்ள ஒரு தோசையை 1 ரூபாய்க்கு விற்று ரசிர்களையும், மக்களையும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

திரைப்படம் வெளியாகும் முன்பே ரசிகர் இந்த செயலை செய்திருந்த நிலையில் நேற்று படம் வெளியாகி நல்ல வரவேற்றை பெற்று வருகின்றது.
இதனால் கர்ணன் என்ற பெயரை போல அனைவருக்கும் 1 ரூபாய்க்கு தோசை வழங்கிய அவரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வாழ்த்தி உள்ளதோடு பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற சுவையான தேசையை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்... எப்படி தெரியுமா?

தேவையான பொருள்கள்
- கோதுமை மாவு - 250 கிராம்
- வெங்காயம் - 1
- இட்லி மாவு - 100 கிராம்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- காய்ந்த மிளகாய் - 2
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். மிக்சியில் கோதுமை மாவு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையை திருப்பி எடுத்தால் சுவையான மொறு மொறு கோதுமை தோசை தயார்.