பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான்! முதல் வாரமே இப்படியா?
5வது வாரத்தில் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அக்டோபர் 1ம் திகதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி வெளியேறியுள்ளனர்.
பவா செல்லத்துறை உடல் நலம் சரியில்லை என கூறியதால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்ட் போட்டியாளர்களாக 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டனர்.
வந்த நாள் முதலே பழைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் எரிச்சலடைய வைத்தது.
முதல் வாரத்திலேயே அனைவரையும் ஸ்மால் ஹவுஸிற்கு அனுப்பினர், இந்நிலையில் இன்றைய வாரத்திற்கான எலிமினேஷனில் அன்ன பாரதி வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி, கடந்த வாரம் தான் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றார்.
இந்நிலையில் குறைந்த அளவில் வாக்குகள் வந்ததால் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |