இந்த கோவிலில் அபிஷேகம் செய்யும் போது நடைபெறும் அதிசயம்!!!
நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் அருளும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும் போது செந்தூர நிறத்திற்கு அவரது முகம் மாறும் அதிசயம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, நவநீதகிருஷ்ணன் ஆலயம்.
இங்கு அருளும் ஆஞ்சநேயர், மிக அபூர்வமாக வடக்கு முகமாக காட்சி தருகிறார்.
இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம்.
அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியுமாம்.
இக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியங்களை நினைத்து, மட்டை தேங்காயை ஒரு துணியால் மூடி அதை ஆஞ்சநேயர் சன்னிதியில் கட்டிவிட்டு வந்தால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும்.