மருத்துவமனையில் அனிதா சம்பத் திடீர் அனுமதி: கணவர் உருக்கமான பதிவு
மருத்துவமனையில் அனிதா சம்பத் திடீர் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அனிதா சம்பத்
பிரபல சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்தான் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பில் பிரபலமானதையடுத்து, பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கடந்து வந்த கஷ்டங்களையும், காதல் பற்றும் கிடைக்கும் நேரங்களில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்ததால் அனிதா சம்பத் சொன்ன கதையை கேட்டு பலர் கொட்டாவி விட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
பிக்பாஸிலிலிருந்து வெளியே வந்த அனிதா சம்பத்திற்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இதனால், அனிதா சம்பத் ரொம்ப பிஸியாகிவிட்டார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
2 நாட்களுக்கு முன் பாலிக்கு சுற்றுலா சென்ற அனிதா சம்பத் அது குறித்து இன்ஸ்டாவில் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது என்று புகைப்படத்துடன் கூடிய போஸ்ட் போட்டிருந்தார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், மருத்துவமனையில் ட்ரிப் போட்டது போன்ற ஒரு புகைப்படம் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத். இதைப் பார்த்த ரசிகர்கள் அனிதாவிற்கு என்ன ஆனது என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த அவருடைய கணவர் எல்லாம் சில நாளில் மாறிவிடும் பப்பு என்று மனைவிக்கு ஆறுதலாக போஸ்ட் போட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவதையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |