பட வாய்ப்பு தருவதாக உறவுக்கு அழைத்த நபர்! புகைப்படத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்!
பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர் தான் அனிதா சம்பத். இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவர், என்ன தான் சோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருந்தாலும், எப்பொழுதும் காதல் கணவனை சேர்ந்து புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
இதனையடுத்து, அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் உடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் இளம்பெண் ஒருவருக்கு நபர் ஒருவர் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தவறான விஷயத்திற்கு அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த நபர் அனுப்பிய குறுஞ்செய்தியை, அனிதாவிற்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார்.
இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனிதா சம்பத், 'தோழி ஒருவர் இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.