அனிருத்துடன் காதல்? பிரபல நடிகை உடல் எடையை குறைத்தது இதற்காக தானா?
பிரபல தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாகவும், அவருக்காகவே உடல் எடையை குறைத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஒரே பாட்டால் புகழ்பெற்ற அனிருத்
ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.
இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.
கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்
இதையடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை அவர் காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ரகசிய காதலா?
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை அனிருத்திற்காக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கேட்டால் இருவரும் எங்களுக்குள் இருப்பது நட்பு தான் என்று கூறி வருகின்றனர். இருவரும் சமீபத்தில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் படு நெருக்கமாக இருந்துள்ளனர்.
அதனால் தற்போது மீண்டும் இவர்களைப் பற்றிய பேச்சு கிளம்பி இருக்கிறது. இந்த தகவலால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரின் குடும்பத்தினரும் பெரும் சங்கடத்தில் இருக்கின்றனர்.
அனிருத்திற்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். திருமணம் கை கூடும் நேரத்தில் இப்படி வெளிவந்த செய்தி அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குடும்பத்தினர் இவர்களை பற்றி பரவும் செய்திகள் குறித்து கவலையில் உள்ள நிலையில் இருவரும் ஜாலியாக இருப்பதாக கூறப்படுகிறது.