திருமணம் பற்றிய கேள்வியால் கடுப்பான அனிருத்.... என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் அனிருத்திடம் ரசிகை ஒருவர் "சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு invite பண்ணுங்க" என கூறியதற்கு கடுப்பாகி அனிருத் பதிலளித்த காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அனிருத்
தமிழில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்றபடி டிரெண்டிங்கான பாடல்களை அமைப்பதில் வல்லவர்.

இதனாலேயே இவர் அடுத்தடுத்த உச்ச நடிகர்களின் மாஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டார். வெளிநாடுகளிலும் தற்போது இசை கச்சேரிகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.
தற்போது உச்ச சம்பளம் பெரும் முன்னணி இசையப்பாளராகளில் ஒருவராக திகழும் அனிருத்துக்கு 35 வயதாகிறது. அவரது திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டுவரும் கேள்வியாக இருக்கின்றது.

அனிருத் பதில்
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் அனிருத்திடம் ரசிகை ஒருவர் "சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு invite பண்ணுங்க" என கூறியதற்கு கடுப்பாகிய அனிருத் "இது வேற.." என கூறிவிட்டு போகிறார். குறித்த காணொளி தற்போது வைரல் ஆகிவருகின்றது.
🗣️: Sir, Sikiram marriage ku invite pannunga #Anirudh: Idhu Vera😂 pic.twitter.com/z2QOesIBPj
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |