விஜய் கொடுத்த சூப்பர் பரிசு: சென்டிமென்டாக வைத்து வேலை பார்க்கும் அனிருத்
தளபதி விஜய் அனிருத்திற்கு கொடுத்த பரிசு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழில் தனுஷ் நடத்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.
இவரின் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் எல்லாம் தற்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் அதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் இசையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திற்கும் ஜவான் திரைப்படத்திற்கும் அதிக சம்பளம் வாங்கி இசையமைத்திருக்கிறார்.
விஜய் கொடுத்த பரிசு
இந்நிலையில், விஜய் குறித்த சென்டிமென்ட் தகவல் ஒன்றை அண்மைய நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
2014ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த கத்தி திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது. அதில் தான் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது. அந்தப் படத்தில் வெளியான பாடல் மற்றும் பி.ஜீ.எம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கவர்ந்தது.
இதனால் விஜய் அனிருத்திற்கு பரிசாக சூப்பரான பியானோ ஒன்றைக் கொடுத்தார். அந்த சமயத்தில் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருந்த போது விஜய்ண்ணா கொடுத்த அந்த பியானோ எனக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது.
மேலும், இப்போது வரைக்கும் நான் இயக்குனர்களுக்கு கொடுக்கும் ட்யூன்கள் எல்லாம் விஜய்ண்ணா கொடுத்த பியானோவில் தான் கம்போஸ் செய்வேன் வேறெதையும் பயன்படுத்த மாட்டேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |