அனிருத்துடன் ரகசிய காதல்... விரைவில் பிரபல நடிகையுடன் திருமணம்: தீயாய் பரவும் தகவல்
தமிழில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்றபடி டிரெண்டிங்கான பாடல்களை அமைப்பதில் வல்லவர் அனிருத், இதனாலேயே அடுத்தடுத்த உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் இசையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாருடன் காதல்?
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் காதல் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார்.
இவர்கள் அந்த படங்களின் ப்ரமோஷன்களின் போதும், சில பட விழாக்களிலும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போதே இவர்களுக்குள் காதல் என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதனை உடனடியாக கீர்த்தி மறுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இதை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே என்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷிற்கும் அனிருத்திற்கும் காதல் என பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வருடத்திற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது, இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இரு தரப்பில் இருந்து தெரிவித்தால் மட்டுமே உண்டு!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |