தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தில் அனிருத் இவ்வளவு குட்டி பையனா? வைரலாகும் புகைப்படங்கள்
Dhanush Aishwarya Wedding in Anirudh Photo: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் அனிருத் சிறுவனான இருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அனிருத், காவ்யா திருமணம்
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கடந்த 11ம் தேதி க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், முதலமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் இதில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யாவும் கலந்து கொள்ளவில்லை. நடிகர் தனுஷிற்கு அனிருத் திருமணம் அழைப்பிதழ் மற்றும் வரவேற்பு அழைப்பிதழ் இரண்டுமே வைக்கவில்லை.

இதனால் திருமணத்திற்கு தனுஷ் வரவில்லை என்றும் தனுஷை அழைக்காததால் ஐஸ்வர்யாவும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. ஐஸ்வர்யா தனுஷ் இருவரின் விவாகரத்து பிரச்சனைதான் இதற்கு காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் அனிருத் சினிமாவிற்குள் நுழைவதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான். தனுஷ் தயாரிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் தான் தனது முதலில் களமிறங்கினார்.

சிறுவனாக அனிருத்
இந்நிலையில் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்றது. தம்பதிகள் இருவரும் விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் இவர்களின் திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. ஏனெனில் குறித்த புகைப்படத்தில் அனிருத் சிறுவனாக காணப்படுகின்றார்.
அனிருத்தின் சிறுவயது புகைப்படத்தினை அவாதானித்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |