அனிருத், காவியா திருமண வரவேற்பு.. தங்கத்தை பரிசாக வழங்கிய கலாநிதி
Anirudh & Kavya Reception: அனிருத் மற்றும் காவ்யா தம்பதிகள் திருமணம் நிகழ்வினைத் தொடர்ந்து தங்க காசு பரிசாக வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிருத், காவ்யா தம்பதிகள்
இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 11ம் தேதி க்ரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு அனிருத் உறவினராக ரஜினிகாந்த் குடும்பம் சென்ற நிலையில், காவ்யாவின் உறவினராக திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் செயினை எடுத்துக் கொடுக்க காவ்யா கழுத்தில் அனிருத் அணிவித்துள்ளார். அதே போன்று காவ்யா கையில் திமுக தலைவர் ஸ்டாலின் செயினை கொடுக்க அதை அனிருத் கழுத்தில் அணிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் அர்ச்சகர்கள், தாலி எதுவும இல்லாமல் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று இந்த தம்பதிகளில் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.
பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி வருகின்றனர்.

தங்க காசு, மோதிரம் பரிசு
இந்நிலையில் காவியா மாறன் தனது திருமணத்தினை முன்னிட்டு சன் குழுமத்தில் பணியாற்று் ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை வாரி வழக்கியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
அதாவது சன் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஆடைகள், தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது. சில ஊரியர்கள் தங்க மோதிரம், சாக்லேட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான தனி சிறப்பு விருந்து ஒன்று நவம்பர் 25ம் தேதி புதன் கிழமை மதியம் 1 மணியளவில் சென்னை எம்.ஆர்.சி-நகரில் அமைந்துள்ள சன் டிவி தலைமை அலுவலகத்தில் வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதல் கொடுக்கப்பட்டுள்ளது. அனிருத், காவியா திருமணத்தினை தாண்டி ஊழியர்களுக்கு இவ்வாறு தங்கத்தில் பரிசளித்துள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

#KavyaMaran gifted gold ring to all the sun group employees. https://t.co/JbLPT2SpVr
— CineAura (@CineAuraX) November 20, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |