துணையை நெருங்காமல் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள்- எப்படி தெரியுமா?
விலங்குகளின் இனப்பெருக்கம் என்பது சூழலின் சமநிலையை பேணவும் உணவு சங்கிலி பாதிப்படையாமல் பாதுகாக்கவும் அவசியமாகின்றது.
இப்படியொரு சமயத்தில் எமது சூழலில் காணப்படும் சில விலங்குகள் இனச்சேர்க்கையில் ஈடுபடாமல் இனப்பெருக்கம் செய்கிறது.
இதனை “பார்த்தீனோஜெனிசிஸ்” எனவும் அழைக்கிறார்கள். இந்த செயன்முறையால் ஒரு பெண் விலங்கு அதன் கருவுறாத முட்டையிலிருந்து ஒரு கருவை உருவாக்குகிறது. இதன் விளைவாக அனைத்து ஆண் அல்லது அனைத்து பெண் குழந்தைகள் வெளியேறுகின்றன.
இந்த முறையில் மட்டும் ஒரு விலங்கு இனப்பெருக்கம் செய்தால் அதனை பார்த்தீனோஜெனிசிஸ் முறை என்கிறார். இவை அல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இனப்பெருக்கம் செய்யாத விலங்குகள்
1. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் உலகில் உள்ள கொடிய ஊர்வன விலங்குகளில் ஒன்றாக கொமோடோ டிராகன்கள் பார்க்கப்படுகின்றது. இதனை உடும்பு என்போம். இந்த உடும்புகள் ஆண் இல்லாமல் இனப்பெருக்கம் செய்கின்றது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் ஒரு பெண் கொமோடோ டிராகன் ஒன்று ஆண் உடும்புடன் தொடர்பு கொள்ளாமல் 25 முட்டைகளை இட்டுள்ளது.
2. பொன்னெட்ஹெட் என அழைக்கப்படும் சுறாக்கள் (ஸ்பைர்னா திபுரோ) பார்த்தீனோஜெனீசிஸ் மூலம் இனப்பெருக்கம் செய்யும். அந்த வகையில், ஒமாஹாவின் ஹென்றி டோர்லி மிருகக்காட்சிசாலை உள்ள பெண் பானெட்ஹெட் ஒன்று ஆண் சுறா இல்லாமல் இளம் சுறா ஒன்றை பெற்றெடுத்துள்ளது.
3. கலிபோர்னியா காண்டோர்ஸ் (ஜிம்னோஜிப்ஸ் கலிஃபோர்னியானஸ்) என அழைக்கப்படும் விலங்கு தன்னுடைய ஆண் துணையுடன் உறவில் ஈடுபடாமல் இனப்பெருக்கம் செய்துள்ளது. சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் ஒரு பெண் காண்டருக்கு இரண்டு ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.
4. குச்சிப் பூச்சிகள் டைமா இனத்தைச் சேர்ந்தவையாக பார்க்கப்படுகின்றது. இந்த பூச்சிகள் ஓரினச்சேர்க்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும். இது சூழலுக்கு ஏற்ப தன்னுடைய திறனை மாற்றிக் கொள்ளும். சூழல் மாறும் போது சில டைமா இனங்கள் எப்போதாவது உறவில் ஈடுப்பட்டு இனப்பெருக்கம் செய்யும்.
5. பிராமினி கண் தெரியாத பாம்புகள் (ராம்போடிஃப்ளோப்ஸ் பிராமினஸ்) துணையுடன் உறவு வைக்காமல் இனப்பெருக்கம் செய்யும். இந்த உயிரினம் பெண்களுக்கிடையே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |