பாம்புகளின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பு திறன் கொண்ட விலங்கள் எவை தெரியுமா?
பூமியில் கொடிய விஷமுள்ள மிருகம் என்றால் அது பாம்பு தான். இந்த பாம்புகளின் விஷயத்தையே முறிக்ககூடிய இன்னும் சில மிருகங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு கடிக்கு எதிர்ப்பு திறன் கொண்ட விலங்கு
ஹனி பேட்ஜர் | ஹனி பேட்ஜர்கள் என்ற விலக்கு கொடூரமாகவும் ஆக்ரோஷமாவும் இருக்கும். இவை பல்வேறு வகையான பூச்சிகள், நீர்நில வாழ்வன, ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வேட்டையாடி வருகின்றன. இவை பாம்புகளை தேள்களை வேட்யாடி உண்ணும். அவற்றின் விஷம் ஹனி பேட்ஜர்களை எதுவும் செய்யாது. |
ஸ்கங்க் | இந்த ஸ்கங்க்ஸ் என்ற மிருகம் ஹனி பேட்ஜர்களுடன் தொடர்புடையவை. எனவே தான் இவற்றிற்கு எதிர்தன்மை இருக்கின்றது. அவை ஒரு நாய் அல்லது பூனையைக் கொல்லக்கூடிய அளவை விட 100 மடங்கு அதிக விஷத்தைத் தாங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விலங்கு விஷமுள்ள விலங்கு இல்லை. |
கீரி | கீரி விலங்கு பற்றி தெரியாதவர்கள் இல்லை. இவை பறவைகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பாம்புகள் போன்ற எதையும் வேட்டையாடி சாப்பிடும். கீரி அவற்றை விடப் பெரிய விஷமுள்ள விலங்குகளையும் கூட அவை வேட்டையாடக்கூடும். மற்ற உயிரினங்களின் விஷத்தை எதிர்க்கும் திறனை வளர்த்துக் கொண்ட சில விலங்குகளில் இந்த பாலூட்டியான கீரியும் ஒன்றாகும். கீரியின் இரத்தத்தில் உள்ள சீரம் நச்சுகளை நடுநிலையாக்கி, விஷம் அவற்றைக் கொல்வதைத் தடுக்கின்றன. |
மர எலி | பாம்புகள் மர எலிகளை வேட்டையாடி உண்ணும். ஆனால் பாம்பின் விஷத்தால் கொல்ல முடியாது.மர எலிகள் பாம்பு விஷத்தை எதிர்க்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. |
முள்ளம்பன்றி | முள்ளம்பன்றிகள் விஷ விலங்குகள் மற்றும் விஷ தாவரங்களிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை மட்டுமல்ல, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த விலங்குகள் விஷதாவரங்களை சாப்பிட்டு தங்களுடைய முட்களை விஷமாக வைத்துக்கொள்கின்றது. இதை வேட்டையாடும் விலங்குகளுக்கு இதன் விஷம் தரணத்தை கொடுக்கும். |
பன்றி | மிருகங்களில் சோம்பேறியான மிருகம் பன்றி தான்.காட்டுப்பன்றிகள் பொதுவாக விஷப் பாம்புகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வாழ்கின்றன. எனவே இந்த விஷ பாம்புகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள விஷத்திற்கான முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை இது கொண்டுள்ளன. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |