உடலை சிலிம்மாக மாற்றும் 6 விலங்குகள்: இனி தினமும் பண்ணுங்க- பலன் நிச்சயம்
தற்போது இருக்கும் மனிதர்களுக்கும் அவர்களின் உடல் அமைப்பிற்கு கொஞ்சம் அளவுக்கு கூட சம்பந்தம் இருக்காது. ஏனெனின் முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் இவை இரண்டும் அளவு அதிகமான உடல் பருமன் வளர்த்து விடுகிறது.
இதனை குறைப்பதற்கு, அதன் பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட் பிளான்படி உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே தற்காலத்திலுள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் வேலையாக உள்ளது.
உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றத்தோடு உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடல் எடையைக் படிப்படியாக குறைப்பதற்கு பலரும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங் செல்வது வழக்கம்.மாறாக உடற்பயிற்சி செய்யும் போது எடை குறைவதோடு உடல் வலிமையும் அதிகரிக்கும்.
அப்படியாயின், உடற்பயிற்சியின் போது ஒரு சில விலங்குகளும் உதவியாக இருக்கிறது. வழக்கமாக சூழலில் பார்த்து ரசிக்கும் பறவைகள், விலங்குகளின் அசைவுகளை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம், இது தொடர்பான விளக்கத்தை பதிவில் பார்க்கலாம்.
உடல் பருமனை குறைக்க உதவும் விலங்குகள்
1. காகம் போன்று நம்மால் பறக்க இயலாது. ஆனால் தண்ணீர் குடிக்க தரைக்கு வரும் போது நடந்து வருவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன்படி, மூட்டுகாளில் கை வைத்தபடி மேலும் கீழும் கால்களை மாற்றி மாற்றி உயர்த்தி பத்து அடி தூரம் நடந்தால் உடல் பருமன் குறையும்.
2. நண்டு போன்று நடப்பது கடினமான பயிற்சி. மாறாக முகுதுத் தண்டில் எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்காக குட்டிக் கரணம் அடிக்கலாம். மற்றும் தரையில் படுத்துக் கொண்டு கை, கால்களை உயர்த்தவும். அதே போன்று தலை, மார்பு பகுதி, மூட்டு ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்று வைத்து கொண்டு முன்னோக்கி நடக்கவும். இதுவும் உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ளும்.
3. முயலின் வேகம் பற்றி ஏற்கனவே நமக்கு தெரிந்திருக்கும். அதே போன்று நாமும் குடுகுடுவென ஓடிவிடும். அது தூரத்தில் இருந்து ரசித்தால் தாவி குதிப்பதை ரசிக்க இயலும். குதிகால்களை தரையில் வைக்காமல் மார்புக்கு நேராக கைகளை உயர்த்தி பாதி நிலையில் அமர்ந்து தாவி தாவிச் செல்ல வேண்டும். இப்படி செய்து வருவதால் உங்களின் உடல் பருமன் நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.
4. காட்டில் பார்த்து ஆச்சப்படுத்த கூடிய விலங்குகளில் ஒன்று தான் கரடி. இவை நேராக நடக்காது. தரையில் கை, கால்களை சரி சமமாக வைத்து நடக்கும். இதற்காகவே கரடியின் தசைகள் வலுவாக இருக்கும். குழந்தை பருவத்தில் குழந்தை நடப்பது போல் உடலை மாற்றி மூட்டுகளை தரையில் வைக்காமல் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். இது உங்களின் மூட்டுக்களை வலுவாக்கும்.
5. வாத்து நடை பல இடங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பள்ளியில் இப்பயிற்சியை அடிக்கடி செய்வார்கள். இடுப்பில் கை வைத்தபடி நடக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது சோர்வாக இருக்கும் நிலை மாறி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
6. தவளை தாவுவது போன்று நாம் தரையில் அமர்ந்தபடி தாவ வேண்டும். தவளை தாவல் தசைகளின் வலிமையை இரட்டிப்பாக்கும். அதே போன்று கால்களில் இருக்கும் தசை வலிமையாக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |