கொள்ளை அழகால் ரசிகர்களை ஈர்க்கும் அனிகா சுரேந்திரன்: வைரலாகும் காணொளி

Vinoja
Report this article
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அனிகா சுரேந்திரன்
மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் அசத்தும் அனிகா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அழகிய நீல நிற சேலையில் சிம்பிளான மேக் அப்பில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
