செடியில் பூத்த சிவப்பு ரோஜா போல் போஸ் கொடுத்த அஜித் மகள் - வைரலாகும் புகைப்படம்
செடியில் பூத்த சிவப்பு ரோஜா போல் போஸ் கொடுத்த நடிகை அனிகாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அனிகா
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனிகா சுரேந்தர். இதனையடுத்து, தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக அனிகா நடித்திருந்தார். அப்படத்தில் அனிகாவின் நடிப்பால் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மீண்டும், ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அஜித், நடிகை நயன்தாராவிற்கு மகளாக நடித்ததால் அனிகா மிகவும் பிரபலமாகிவிட்டார்.
இதனையடுத்து, வயதுக்கு மிஞ்சின அளவில் கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்தார்.
இதைப் பார்த்த ஒரு தரப்பு நெட்டிசன்கள் அனிகாவை விளாசி வந்தனர். இதையெல்லாம் அனிகா கண்டுக்கவில்லை. இதனால் மிக விரைவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அனிகா.
‘ஓ மை டார்லிங்’ படத்தில் நடிகை அனிகா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்காகினர்.
ஒரு சீனில் ஹீரோவுடன் நடிகை அனிகா ரொம்ப நெருக்கமாக நடித்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே இப்படியா என்று எதிர்மறை கமெண்ட்டை அள்ளி விசினர்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், நடிகை அனிகாவின் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், ரோஜா செடியில் பூத்த சிவப்பு ரோஜா போல் போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகள் அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Perfectly imperfect ? pic.twitter.com/zEb5GpezsN
— Anikha Surendran (@AnikhaOffI) May 7, 2023