முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அனிகா... புடவையில் வெளியிட்ட புகைப்படம்
நடிகை அனிகா சுரேந்திரன் பெரும்பாலான நேரங்களில் கிளாமர் உடையணிந்து புகைப்படம் வெளியிடும் நிலையில், தற்போது புடவையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.
2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, தமிழில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

பின்பும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அசத்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து தனக்கான இடத்தினை தக்க வைத்து வருகின்றார்.

இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். மாடர்ன் உடையணிந்து அதிகமான புகைப்படங்களை வெளியிடுவதுடன், அவ்வப்போது குடும்பபெண்ணாக புடவையணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போதும் புடவையணிந்து குடும்ப பெண்ணாக காணப்படும் அனிகாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக இருந்தவரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |