ஊட்டி குளிரில் ஹொட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் அனிகா சுரேந்திரன்... குவியும் லைக்குகள்
நடிகை அனிகா சுரேந்திரன் ஊட்டி குளிரில் ஒற்றை ரோஜா போல் கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனிகா சுரேந்திரன்
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக நடித்து வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே தனக்கொன ஒரு அழிக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபல்யம் ஆனார்.
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லமாக அழைப்பது வழக்கம்.
தற்போது ஹீரோயினாகவும் கலக்கிவரும் அனிகா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
அனிகா தற்போது ஊட்டியில் இருக்கும் நிலையில் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |