மோசமான விமர்சனங்களுக்கு குட்டி நயனின் நெத்தியடி பதில்! என்ன சொன்னார்னு தெரியுமா?
மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
நடிகை அனிகா
தொடர்ந்தும் மலையாள திரைப்படங்களான 4 ப்ரெண்ட்ஸ், 5 சுந்தரிகள், நயனா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், அஜித், திரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை மனதை பிடித்துவிட்ட அனிகா, 'நானும் ரெளடி தான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
ஓ மை டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கைளை பெற்றது.
தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் நடிகை அனிகா அடிக்கடி விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் இவர் கிளாமராக வெளியிடும் புகைப்படங்களுக்கு அவ்வப்போது எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிகையில், “சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விமர்சனங்களை சந்திப்பது வழக்கம்.நான் கிளாமராக டிரஸ் பண்ணுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.”என தெரித்துள்ளார்.
மேலும், “தப்பான விமர்சனங்கள் வருவது வாழ்க்கையின் ஒரு பகுதியே. எப்படி டிரஸ் பண்ணினாலும் தப்பா பேசுறவங்க தப்பா தான் பேசுவாங்க. இருப்பினும் சில தவறான விமர்சனங்கள் என்னை ரொம்பவே பாதிக்கும். நானும் மனுஷி தானே.” என்று அனிகா குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |