Elephant: ஆக்ரோஷமாக வந்த யானை! நூலிழையில் உயிர் தப்பிய நபரின் திகில் காட்சி
காட்டு யானை ஒன்று விவசாயி ஒருவரை ஆக்ரோஷமாக தாக்க வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆக்ரோஷமான யானை
தற்போது இணையத்தில் பல சுவாரசிய காணொளிகள் வலம் வருகின்றது. அதிலும் செல்லப்பிராணிகள், யானைகள், விலங்குகளின் வேட்டை இவ்வாறான காட்சிகள் அதிகம் என்றே கூறலாம்.
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
இன்றைய காலத்தில் காட்டில் வாழும் யானைகள் பெரும்பாலும் ஊருக்குள் வந்து மக்களுக்கு பிரச்சினை கொடுப்பது மட்டுமின்றி, சில தருணங்களில் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது.
கர்நாடகா மாநிலம் கேசகுடி கிராமத்தில் விவசாயி ஒருவர் பாக்கு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக புகுந்த காட்டு யானை அவரை ஆக்ரோஷமாக தாக்குவதற்கு முயன்றுள்ளது.
இத்தருணத்தில் உடனே சுதாரித்துக் கொண்ட விவசாயி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இக்காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |