என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க! கதறும் பிரபல நடிகை
அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலையில் கண்ணீரு் மல்க பேசியுள்ளார்.
நடிகை சிந்து
வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து.
இதையடுத்து சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்த சிந்து, கொரோனா காலகட்டத்தில் கூட உணவின்றி தவித்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
நிலைகுலைய வைத்த புற்றுநோய்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிந்து கூறுகையில், “2020-ம் ஆண்டு எனக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, எனது மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், இங்கிலிஸ் மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன்.
ஆனால் இதிலிருந்து மீள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை நான் குறைசொல்லவில்லை. அவர்கள் நன்றாக தான் சிகிச்சை அளித்தார்கள். ஆனால் அவை என் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை.
தஞ்சாவூரில் தங்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில், திடீரென மருமகன் இறந்துவிட்டதால் சிகிச்சையை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டோம்.
எனது மகளும் வேலையில்லாமல் கை குழந்தையுடன் கஷ்டப்படும் நிலையில், அவளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.
தினம் தினம் வலியால் துடிப்பதற்கு பதில் எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என டாக்டர்களிடம் கேட்டு பார்த்தேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்று எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.