Anemia Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியம் பண்ணுங்க.. உங்களிடம் இருக்கா?
தற்போது இருக்கும் முறையற்ற வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும் நிறைய தொற்றுக்கள் பரவி வருகின்றன.
இதன்படி, அனீமியா எனும் நோய் தொற்றும் பெண்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி (WHO) இந்த நோயால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களாம்.
இந்த நோய் ஆண்களை விட பெண்களை தான் அதிகமாக தாக்குகின்றதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றார்.
அனீமியாவை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்தால் உரிய சிகிச்சை பெறலாம்.
அப்படியாயின் அனீமியாவை நோயின் அறிகுறிகள் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தோல் உரிதல்
சிலருக்கு சருமத்தில் தோல் உரிதல் பிரச்சினை இருக்கும். அதிலும் குறிப்பாக உள்ளங்கை மற்றும் கை, கால்களில் இப்படி உரிதலை அவதானிக்கலாம். இதனை சருமம் தொடர்பான நோய் அல்லது சாதாரண உரிதல் என நினைத்து கொண்டு பேசாமல் இருப்பார்கள். இந்த நோய் ரத்த சோகையின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. முடிந்தவரை இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுவது சிறந்தது.
2. மூச்சுப் பிரச்சினை
சுவாச பிரச்சினையுள்ளவர்களுக்கு மூச்சு திணறல் பிரச்சினை இருக்கும். இவர்களை தாண்டி ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கும் ரத்த சோகை பிரச்சினையுள்ளவர்களுக்கும் மூச்சுப் பிரச்சினை இருக்கும். உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த ஷார்ட் ப்ரீத்திங் பிரசசினை என்றும் அழைப்பார்கள்.
3. தலைசுற்றல்
வெளியில் வேலைசெய்யும் பெண்கள் அல்லது வீட்டில் இருக்கும் பெண்கள் இப்படி அனைவருக்கும் தலைச்சுற்றல் பிரச்சினை இருக்கும். இதனை சாதாரணமாக நினைத்து பெரும்பாலானவர்கள் மருத்துவரை பார்க்காமல் இருப்பார்கள். ஆனால் தலைச்சுற்றல் பிரச்சினை ரத்த சோகையின் முக்கிய அறிகுறியாக உள்ளது என பலருக்கும் தெரியாது.
4. சோர்வு
பெண்கள் எப்போதும் சோர்வாகவும் பலவீனம் உணர்கிறார்கள் என்றால் இவர்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். வெள்ளை ரத்த அணுக்கள் குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் இதன் தாக்கத்தால் உடல் சோர்வடையும்.
சிகிச்சை :
- நோயாளிகளின் வயது மற்றும் நோயின் தீவிரத்தன்மை அறிந்து உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
- இளம் நோயாளிகளாக இருந்தால் அவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
- எலும்பு மஜ்ஜை தானம் பெறுவதற்கு பொருத்தனமான நபர் கிடைக்காவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உண்டான சிகிச்சைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இரத்த சோகையை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்கும் உணவுகள்
1. இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச்சத்து, பி12 மற்றும் பி9 வைட்டமின் சத்துகள் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இது ரத்த சோகையால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்தும்.
2. கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்த சோகை நோய் இல்லாமல் போகின்றது.
3. மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய் , கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் இரும்பு சத்தையும் சேர்த்து கொடுக்கின்றது.
4. பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை , உள்ளுறுப்புகள் , கோழி போன்ற உணவுகளில் தேவையான அளவு உள்ளது. காய்கறிகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பி12 குறைபாட்டு நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.
5. சந்தையில் கிடைக்கக் கூடிய கீரைகள், பச்சை காய்கறிகள் , பீன்ஸ் ,கடலை, பழங்கள், மாமிசம், முட்டை , கல்லீரல், மீன் ஆகிய உணவுகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த சோகை நோய் வருவது குறைவாக இருக்கும்.
6. அசைவ உணவுகளை உண்ணாதவர்கள் இரும்புச் சத்து மற்றும் பி12, பி9 குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. இதனால் உணவுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் எடுத்து கொள்கிறார்கள்.
இரத்த சோகை குணமாகாமல் இருப்பதற்கான காரணங்கள்
சிலருக்கு என்னதான் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுத்தாலும் மாத்திரைகள் சாப்பிட்டாலும் ரத்த சோகை குணமாகாமல் சில சமயங்களில் இருக்கும். இது அவர்களின் பரம்பரை நோயாகவும் இருக்கலாம்.
சிலருக்கு வாய்வழி உட்கொள்ளும் இரும்புச்சத்து மாத்திரைகள் குடித்தாலும் அவர்களின் வயிற்றுப் பகுதியில் அதிகமான புண், குடல் பகுதி அழற்சி உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் இருக்கலாம். ரத்த நாளம் வழி இரும்புச்சத்தை ஏற்றும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படலாம்.
பி12 நிரம்பிய உணவுகளை உண்ணும் ஒருவருக்கு இரைப்பையில் இருந்து சுரக்கப்படும் அமிலத்தன்மை விளைவாக பி12 உணவில் இருந்து பிரிந்து நமது இரைப்பைக்கு செல்லும். அந்த சமயத்தில் இரைப்பையில் சுரக்கப்படும் “இண்ட்ரின்சிக் ஃபேக்டர்” எனும் நொதியம் குடலை அடையும். அப்போது சிலருக்கு பி12 யின் சக்தி முழுமையாக உடலுக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் கூட நோய் குணமாகாமல் இருக்கும்.
சிலருக்கு வயிற்றுப் பகுதி புண், அமிலம் சரியாக சுரக்காமை, இண்ட்ரின்சிக் ஃபேக்டர் உற்பத்தி இல்லாமை போன்ற பிரச்சனைகளால் உணவுகளினால் உட்க் கொள்ளப்படும் பி12 பயனளிக்காமல் இருக்கும். இதனால் சில மருத்துவர்கள் ஊசி வழியாக பி12- ஐ ஏற்றுவார்கள்.
ரத்த சோகை குணமடையாமல் தொடர்ந்து இருப்பதால் இதயத்துக்கும் பிற உள்ளுறுப்புகளுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நுட்பத்தையும் இது பாதிக்கும்.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் இருப்பது போன்று தெரிந்தால் உரிய மருத்துவர்களை நாடி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். எப்போதும் ரத்த சோகை குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |