உங்களது போனில் இந்த Apps இருந்தால் உடனடியாக Uninstall செய்திடுங்கள்!!! ஓர் எச்சரிக்கை செய்தி
ஆறாம் விரலாய் நம் கைகளை அலங்கரிக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் உலகமே என்று வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஸ்மார்ட்போன்களால் பல நன்மைகள் இருந்தாலும், அதில் நாம் பதிவிறக்கி பயன்படுத்தும் செயலிகளால் ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான செயலிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சைபர் செக்யூரிட்டி மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆபத்தான செயலிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் கண்டுபிடித்து கூறியுள்ள 151 செயலிகளை பதிவிறக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 80.5 மில்லியன் மக்கள் இந்த 151 மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கஸ்டம் கீபோர்ட், QR குறியீடு ஸ்கேனர்கள், வீடியோ மற்றும் புகைப்பட எடிட்டிங் கருவிகள், கால் பிளாக்குகள் ஆகியவற்றுக்காக பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலிகள் உண்மையில் மால்வேர் என்றும், உங்களது போனுக்கே ஆபத்தானவை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்த பின், Location மற்றும் IMEI எண்களை கேட்கும், இதன் மூலம் உங்களது இருப்பிடம், மொழி ஆகியவற்றை அறிந்து கொண்டு Premium SMS சேவைக்கு பயன்படுத்துகின்றன.
இதற்கு கட்டணத்தையும் வசூலித்துவிட்டு, பயனர்களை ஏமாற்றுவதே குறித்த செயலிகளின் முக்கிய வேலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.