ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி... ஒருதடவை செய்து பாருங்க
ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகு கார குழம்பு ரெசி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான வீடுகளில் சாம்பார், புளிக்குழம்பு என்று வைப்பது வழக்கம். மதிய உணவிற்கு இவ்வாறு சாப்பிட்டு பழகியும் சென்றிருக்கும்.
இந்நிலையில் ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகு குழம்பு செய்து சாப்பிடலாம். பூண்டு மற்றும் மிளகு ஆரோக்கியத்திற்கு அதிக உதவி செய்கின்றது.
உடம்பில் பல ஆரோக்கிய நன்மையினை கொடுக்கும் இந்த பொருட்களை வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் பூண்டு மிளகு குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
1/2 கப் உரித்த பூண்டு
1⁄2 கப் சின்ன வெங்காயம்
1 தக்காளி
1⁄4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
4 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
தேவையான அளவு உப்பு
1⁄4 டேபிள் ஸ்பூன் வெல்லம்
1⁄2 கப் தேங்காய்ப்பால்
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
1⁄2 டேபிள் ஸ்பூன் கடுகு
1⁄4 டீஸ்பூன் வெந்தயம்
1⁄4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள்
மசாலா விழுது அரைக்க:
2 ஸ்பூன் மல்லி
4 வர மிளகாய்
1 ஸ்பூன் கடலைப்பருப்பு
1⁄2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் மல்லி விதை, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பினை சேர்ந்து பொன்னிறமாக வறுத்து, இதனுடன் மிளகை சேர்த்து வறுக்கவும்.
இறுதியாக சீரகத்தை சேர்த்து அனைத்தையும் வறுத்து ஆற வைத்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு உரித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தக்காளி இவற்றினை சேர்த்து வதக்கியதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்பு புளி கரைசல், உப்பு, சிறிதளவு வெல்லம், தண்ணீர் இவற்றினை சேர்த்து கொதிக்க விட்டு, கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |