காரசாரமா சாப்பிட நினைச்சா இந்த வெங்காய சட்னி செய்ங்க - சுவை அள்ளும்
மிகவும் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட நினைப்பவர்களுக்கு காரசாரமான வெங்காய சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வெங்காய சட்னி
காலையில் அம்மா ஏதாவது உணவு செய்தால் கட்டாயம் அதற்கு ஒரு சட்னி செய்துவிடுவார். ஆனால் எப்பொழுதுமே தேங்காய் சட்னி கார சட்னி, வெங்காய சட்னி போன்றவை தான் அடிக்கடி செய்ய வரும்.
ஆனால் ஆந்திரா ஸ்டைலில் காரமான சட்னி யாராவது சாப்பிட்டுள்ளீர்களா? ஆந்திரா என்றாலே காரமான சுவையான உணவு வகைகளை சாப்பிடுவார்கள்.
அப்படி ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான, சுவையான, காரசாரமான ஆந்திரா வெங்காய சட்னி என்ன பொருட்கள் போட்டு செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கடுகு -½ டீஸ்பூன்,
- வெந்தயம்- 1/4 டீஸ்பூன்,
- சீரகம் 1/2 டீஸ்பூன்,
- வரமிளகாய் - 12,
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது),
- உப்பு - சுவைக்கேற்ப,
- தக்காளி -1 (நறுக்கியது),
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
- கடுகு - 1/4 டீஸ்பூன்,
- சீரகம் - 1/4 டீஸ்பூன்,
- கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்,
- பூண்டு - 4 பல்,
- வரமிளகாய் -2,
- கறிவேப்பிலை-1 கொத்து எடுத்து கொள்ள வேண்டும்.
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்க வேண்டும். இது சூடு குறையும் வரை நன்றாக குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்த மிளகாயை சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்பொழுது காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வெங்காய சட்னி தயார். இதனை இட்லி தோசை உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |